முகப்பு
வேலைவாய்ப்பு

பாய்லர் ஆப்ரேட்டர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பாய்லர் ஆப்ரேட்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 16 ஜனவரி 2021, 12:42 pm IST
பகிர்:


பொதுத்துறை நிறுவனமான நால்கோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பாய்லர் ஆப்ரேட்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 14200301

பணி: Boiler Operator

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.29,500 - 70,000

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Attendant பணிக்கான தொழிற்பயிற்சி முடித்து முதல் அல்லது இரண்டாம் நிலை சான்றிதழ் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.12,000 அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூ.15,500 ஆம் உதவித்தொகை வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்பி வைக்க வேண்டிய அஞ்சல் முகவரி: 
Recruitment Cell, HRD Department, S &P Complex, NALCO, Angul - 759 145, Odisha

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்ட சேர கடைசி தேதி: 31.01.2021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://nalcoindia.com/wp-content/uploads/2020/12/Advertisement-No.14200301-for-SUPTJOT-OperatorBoiler_ver-02.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.