மருத்துவத்துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்
அறிக்கை எண். 05/MRB/2021
பணி: Skilled Assistant Grade-II(Welder Grade-II) - 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
Advertisement
Advertisement
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) /DW பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/Welder_Grade%20_II_Notification_29_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.