கோவையில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதற்கான வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செவிலியர்(தற்காலிகமானது)
காலியிடங்கள்: 100
Advertisement
Advertisement
பணியிடம்: கோயம்புத்தூர்
பணிக்காலம்: 3 மாதம்
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,000
தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நாளை வியாழக்கிழமை(ஜூன்.3) காலை 10 மணிக்கு அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகே அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம்:
கல்விச் சான்றிதழ்கள், இருப்பிட சான்று, சாதிச் சான்று மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.