காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!
நடிகர் ஆமிர் கான் திருமணம் செய்துகொண்டார்...
நடிகர் ஆமிர் கான் தன் காதலியை இன்று திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் ஆமிர் கான் தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை இன்று மும்பையிலுள்ள தன் வீட்டில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணைக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
ஆமிர் கான் முதல்முறையாக 1986 -2002 வரை தயாரிப்பாளர் ரீனா டட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இருவர் (ஜுனைத் கான், இரா கான்) இருக்கின்றனர்.
Advertisement
Advertisement
பிறகு, 2005 இல் கிரண் ராவை ஆமிர்கான் திருமணம் செய்தார். ஆனால், இவர்களும் 2021-ல் பிரிந்தனர். ஆனாலும் இருவரும் அவர்களது குழந்தை ஆசாத்துக்காகத் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஆரோக்கியமான உறவும் இருக்கிறது. இயக்குநரான கிரண் ரான், லாபதா லேடீஸ் (lapata ladies) திரைப்படத்தை இயக்கியவர்.
தற்போது, மூன்றாவது முறையாக கௌரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவைச் சேர்ந்த கௌரி நீண்ட காலமாக ஆமிர் கானின் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Aamir Khan married his girlfriend today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.