அதிக பார்வைகளைப் பெற்ற சல்மான் கானின் பிக்பாஸ் விடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் சட்டையைக் கழற்றியது வைரலாகியிருந்தது..
நடிகர் சல்மான் கான் சட்டையைக் கழற்றிய பிக்பாஸ் எபிசோடு கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
நடிகர் சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி கான்களில் ஒருவர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருப்பதால் பாலிவுட் திரைத்துறையில் தனித்துவமான நடிகராகவும் எப்போதும் சர்ச்சைகள் சூழவும் வலம் வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது.
மேலும், பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார். சில மாதங்களாகத் தலைக்கு தொப்பி அணிந்து உடல் மெலிந்த தோற்றத்தில் சல்மான் காணப்படுவதால் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். சல்மான் கானுக்கு உடலில் ஏதோ பிரச்னை என்றும் வதந்திகள் பரவின.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்தியில் தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ”எனக்கு தற்போது 60 வயதாகிறது. என்னையும் வயதாகிவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள். எதற்காக என்னைக் கேலி செய்கிறார்கள்? யார் செய்கிறார்கள் என்பது தெரியும். நான் அதற்கெல்லாம் எதிர்வினையாற்றுவதில்லை. எனக்கு அதிகமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனால், இதில் கவலைப்படத் தேவையில்லை. பேசுபவர்கள் பேசட்டுமென விட்டுவிடுவேன்.
முதலில் உங்களை நீங்களே பாருங்கள். உங்களது உடல், உங்களது பெற்றோர்களைப் பாருங்கள். பின்னர் வருண் தவானை, சோஹலைக் கேலி செய்யுங்கள். நான் கிழிந்த காலணிகளை அணிந்துள்ளேன். எவ்வளவு முடியுமோ கேலி செய்யுங்கள்.” எனக் கூறி தன் சட்டையைப் போட்டியாளர்கள் முன் கழற்றினார். மேலாடை இல்லாத போது சல்மான் கான் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், தொப்பியை நீக்கியபோது முடி உதிர்வு காரணமாகவே அதனை அணிந்திருந்ததும் தெரிந்தது.
இந்த விடியோவை பகிர்ந்த சல்மான் கான் ரசிகர்கள், “சல்மான் எப்போதும் சிங்கம் மாதிரிதான் இருக்கிறார்” என உற்சாகமாகப் பதிவிட்டனர். சமூக வலைதளங்களில் இந்த விடியோ அதிகமாக பகிரவும்பட்டது.
இந்த நிலையில், இந்த குறிப்பிட்ட பிக்பாஸ் எபிசோடு 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட எபிசோடும் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
The Bigg Boss episode in which actor Salman Khan took off his shirt has garnered millions of views.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.