FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அது என்னோடு புதைக்கப்படும்: சல்மான் கான்

தன்னைக் குறித்து சல்மான் கான் பேச்சு...

18 அக்டோபர் 2026, 11:57 am IST
சல்மான் கான்
பகிர்:

நடிகர் சல்மான் கான் தன்னைக் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி கான்களில் ஒருவர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருப்பதால் பாலிவுட் திரைத்துறையில் தனித்துவமான நடிகராகவும் எப்போதும் சர்ச்சைகள் சூழவும் வலம் வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது.

மேலும், பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சல்மான் கான், “என் வாழ்க்கையில் நிறைய காயங்கள் இருக்கின்றன. அதனாலேயே என் உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. என் இளம் ரசிகர்கள் பலரும் அவர்களின் தந்தையிடம் உங்கள் வயதுதானே சல்மான் கானுக்கும்... அவர் எப்படி இருக்கிறார்? நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எனக் கேட்பார்கள். நான் அந்த அளவிற்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்.

எனக்கும் ஷாருக்கானுக்கு சில தவறான வழிகாட்டுதல்களால் கடந்த காலங்களில் கசப்புகள் இருந்தன. இருவருமே தவறான புரிதல்களில் இருந்தோம். ஆனால், இப்போது சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஆரோக்கியமான உறவு இருக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் திரைப்படமாக்கலாம் என பலர் கூறுகின்றனர். என் பயோபிக் வருமா? என்றும் கேட்கின்றனர். அதற்கு நான் கண்டிப்பாக அனுமதியளிக்க மாட்டேன். என் வாழ்க்கை என்னோடு புதைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Salman Khan has given a candid answer to a question about himself.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments