FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டோரதி என்ன மாதிரியான கதை? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

டோரதி திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்...

14 செப்டம்பர் 2026, 6:55 pm IST
பகிர்:

டோரதி திரைப்படம் குறித்த கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும், அண்மையில் டோரதி திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டோரதி எப்படிப்பட்ட திரைப்படம் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு கார்த்திக் சுப்புராஜ், “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் ஒரு திரைப்படத்தை நான் பார்க்கிறேன். அதுதான் சரியாக இருக்கும் என்றும் நினைப்பதால் டோரதி குறித்து சொல்வதை தவிர்க்கிறேன். டீசரில் டிரைலரில் என்ன சொல்லப்படுகிறதோ அந்த அளவிற்கான தகவலே போதும். டோரதி டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Director Karthik Subbaraj has responded to a question regarding the movie Dorothy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments