83 வயதிலும் குத்தாட்டம் போட வைக்கும் இளையராஜா... வெளியானது டோரதி பாடல்!
இளையராஜா இசையமைப்பில் டோரதியின் முதல் பாடல் வெளியானது...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தற்போது தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகியாக நடித்த இப்படத்திற்கு, “டோரதி” எனப் பெயரிட்டுள்ளனர்.
மதுரையைக் களமாக வைத்து உருவான இப்படத்தில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் தரத்துடன் இதன் உருவாக்கம் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில், இளையராஜா இசையமைத்து, எழுதிய இப்படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து பாடல் வெளியாகியுள்ளது. ஆந்தோனி தாசன் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடல் வரிகளும் குத்தாட்ட இசையும் கவனம் பெறுவதால் விரைவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
The first song from the movie Dorothy directed by Karthik Subbaraj, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.