டோரதி சர்வதேச திரையிடல்... டொரண்டோ சென்ற கார்த்திக் சுப்புராஜ்!
டோரதி டொரண்டோ திரைவிழாவில் திரையிடப்படுகிறது...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் டொரண்டோ திரைவிழாவில் திரையிடப்படுகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றுள்ளனர். இப்படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
The film Dorothy, directed by Karthik Subbaraj, is being screened at the Toronto Film Festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.