தவறாகப் பேசியவர்களால் கவலைப்படவில்லை: கார்த்திக் சுப்புராஜ்
டோரதியின் வெற்றி குறித்து கார்த்திக் சுப்புராஜ்....
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டோரதி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த பாலன், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறேன். டோரதியின் கதை எனக்குள் எங்கே உருவானது எனத் தெரியவில்லை. முதல்முறை ஒரு திருநங்கை அக்காவைப் பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது. ஆணாகப் பிறப்பது பெருமிதமாகப் பார்க்கப்பட்ட சமூகத்தில் ஆண் உடலுக்குள் பெண்ணைக் கண்டடைந்தவன் அவளைக் காதலிக்கவே செய்வான். அந்தப் பயணம் டோரதியில் இருக்கிறது.
இப்படத்தின் மூலம் தனிப்பட்ட வெற்றியாகக் கருதுவது, டோரதியைப் பார்த்த பல ஆண்கள் கண்ணீர்விட்டு இனிமேல் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வை மாறும் எனச் சொன்னதுதான். இளையராஜா சாரின் இசை இல்லையென்றால் இப்படம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது என்பதை நானே உறுதியாக நம்புகிறேன். இப்படத்தைத் தவறாக பேசியவர்களால் நான் எந்தக் கவலையும் படவில்லை. நான் என் ரசிகர்களை நம்பினேன். அவர்கள் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Director Karthik Subbaraj has spoken about the film Dorothy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.