FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாய், பன்னி... மோகன். ஜிக்குப் பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

மோகன். ஜிக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்....

14 அக்டோபர் 2026, 12:15 pm IST
இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மோகன். ஜி
பகிர்:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட விடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. சில மாறுபட்ட கருத்துகள் கிடைத்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இப்படம் திருநங்கைகள் மீது சமூகம் வைத்திருக்கிற பார்வைகளையும் மாற்றும் என விவாதங்கள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இயக்குநர் மோகன். ஜி அப்படியொரு விவாதத்தில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கை ஒருவரிடம், “நீங்கள் திருமணம் செய்துகொண்டு என்ன செய்வீர்கள்? எப்படி குழந்தை பெற்றுக்கொள்வீர்கள்” எனக் கேள்விகளை எழுப்பினார். இந்த விடியோவை பார்த்த பலரும் மோகன். ஜியின் கேள்விகள் அறுவறுப்பாக இருப்பதாக விமர்சித்தனர்.

தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். இதில், “இயக்குநர் மோகன். ஜி என்பவர் டோரதியை விமர்சித்திருக்கிறார். அது அவருடைய பார்வை. அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அவர் திருநங்கைகள் திருமணம் செய்துகொண்டு எப்படி குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்கிற மனிதத் தன்மையற்ற கேள்விகளைக் கேட்கிறார். இது கேள்வி இல்லை. அவமரியாதை. நாய்கள், பன்றிகள் கூடத்தான் குட்டிப்போட்டு வாழ்கின்றன. அது மட்டும்தான் வாழ்க்கையா? குழந்தை இல்லாதவர்கள்; உடல் காரணங்களால் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லாம் வாழவே கூடாதா? இதனை திருநங்கை சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட வன்முறையாகவே பார்க்கிறேன். இவர்களைப் போன்றவர்கள் பொதுவெளியில் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்பதும் தெரியவில்லை. இதெல்லாம் மிகத் தவறான விஷயம். மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். நாம் இப்படி பேசுபவரைக் கடந்து செல்கிறோம் என்பதும் வருத்தமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் பதிவுக்கு பலரும் ஆதரவளித்ததுடன் பதில் சொல்லும் அளவிற்கு மோகன். ஜி தகுதியானவர் இல்லை என அவரையும் விமர்சித்து வருகின்றனர்.

The video released by director Karthik Subbaraj has sparked a debate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments