முகப்பு

விடியோ கேமிலும் இப்படி விளையாட முடியாது..! சூர்யவன்ஷியைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

வைபவ் சூர்யவன்ஷியின் இரட்டைச் சதம் பற்றி தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது...

விடியோ கேமிலும் இப்படி விளையாட முடியாது..! சூர்யவன்ஷியைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
வைபவ் சூர்யவன்ஷி, தினேஷ் கார்த்திக் - படங்கள்: பிசிசிஐ, தினேஷ் கார்த்திக்
பகிர்:

இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் 52 பந்துகளில் இரட்டைச் சதம் பற்றி தினேஷ் கார்த்திக், “இதுபோல விடியோ கேமிலும் விளையாட முடியாது” எனக் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இந்தியாவும் யுஎஇ அணியும் மோதின. டாஸ் வென்ற யுஎஇ பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 14.2 ஓவர்களில் 254-3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முன்னாள் இந்திய வீரரும் ஆர்சிபி அணியின் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடவுளே, இந்தியா ஏ - யுஎஇ ஏ அணிகளின் ஸ்கோர் கார்டை பார்த்தீர்களா? 248 ரன்களை 14 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்து சேஸ் செய்துள்ளார்கள். வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். இதுபோல ஒன்றை நான் பார்த்ததே இல்லை. இந்தப் போட்டி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

53 பந்துகளில் 35 பந்துகளில் அவர் சிக்ஸரும் பவுண்டரிகளும் மட்டுமே அடித்துள்ளார். விடியோ கேமில்கூட இப்படி விளையாட முடியாது. யுஎஇ பந்துவீச்சாளர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இதை முன்பு கேள்விபட்டதும் இல்லை; முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று. இதைப் பற்றி நான் எதும் அதிகமாக சொல்லவில்லை. ஸ்கோர் கார்டை பார்த்ததும் இப்படி சிரித்துக்கொண்டே இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோவில் அவர் முழுவதும் சிரித்துக்கொண்டே பேசியது கவனிக்கத்தக்கது. மனதார பாராட்டிய தினேஷ் கார்த்திக்கின் விடியோ வைரலாகி வருகிறது.

summary

You couldn't play like this even in a video game..! Dinesh Karthik praises Suryavanshi's batting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.