52 பந்துகளில் இரட்டைச் சதம்..! உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்தியாவின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

இந்தியாவின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இந்தியா ஏ - யுஎஇ ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஎஇ பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 14.2 ஓவர்களில் 254-3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
இதில் சூர்யவன்ஷி 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடித்தார். 26 பந்துகளில் சதத்தையும் 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் நிறைவு செய்து சாதனை படைத்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்தவர்கள்
52 பந்துகளில் - சூர்யவன்ஷி (2026) {இந்திய வீரர்]
103 பந்துகளில் - சாட் போவ்ஸ் கேன்டர்பரி (2024) [நியூசி. வீரர்]
114 பந்துகளில் - நாராயண் ஜெகதீசன் (2022) {இந்திய வீரர்]
114 பந்துகளில் ஹாரி புரூக் (2026) [இங்கிலாந்து வீரர்]