முகப்பு

டி10 கிரிக்கெட்டில் அதிவேக சதம்..! வரலாறுச் சாதனை படைத்த ஹெட்மயர்!

அபுதாபி டி10 கிரிக்கெட்டில் ஷிம்ரன் ஹெட்மயர் படைத்த சாதனை குறித்து...

டி10 கிரிக்கெட்டில் அதிவேக சதம்..! வரலாறுச் சாதனை படைத்த ஹெட்மயர்!
ஷிம்ரன் ஹெட்மயர் - படம்: எக்ஸ் / அபுதாபி டி10
பகிர்:

அபுதாபியில் நடைபெறும் டி10 கிரிக்கெட்டில் ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

எமீரட்ஸ் ஈகிள் அணிக்கும் யுனைடெட் டைகர்ஸ் அணிக்கும் நேற்றிரவு போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யுனைடெட் டைகர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த எமீரட்ஸ் ஈகிள் 10 ஓவர்களில் 147/1 ரன்கள் எடுத்தது. இதில் ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

Advertisement

Advertisement

இவருடன் டேவிஸ் வைஸ் 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து உதவினார். அடுத்து விளையாடுய யுனைடெட் அணி 10 ஓவர்களில் 107/6 ரன்கள் எடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஷிம்ரன் ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இத்துடன் அபுதாபி டி10 வரலாற்றிலேயே ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஷிம்ரன் ஹெட்மயர் முதலிடம் பிடித்துள்ளார். 10 இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக டி10 கிரிக்கெட்டில் முதல்முறையாக ஹெர்பானே ரூதர்போர்டு 40 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது, இந்த சாதனை ஹெட்மயரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஸ்காட் எட்வர்டு இசிஎல் டி20 போட்டியில் 39 பந்துகளில் 137 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். பிரீசீசன் டி10 போட்டியில் வில் ஜாக்ஸ் 25 பந்துகளில் லாங்ஷ்யர் அணிக்கு எதிராக அடித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

summary

Shimron Hetmyer scored the fastest century in T10 cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.