FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

55 வினாடிகள் முன்பு
இஷான் கிஷன் - படம் | பிசிசிஐ
பகிர்:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

ஹாமில்டனில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், நியூசிலாந்து அணி டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

Advertisement

Advertisement

இன்றையப் போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன், 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 69 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன், 2016 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103.

summary

Indian player Ishan Kishan has set a new record in international T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments