FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இஷான் கிஷன் - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இஷான் கிஷன் 1005 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 37.22 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 169.47 ஆகவும் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவர் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்கள் விளாசியுள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 103.

சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1164 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும்.

summary

Indian wicketkeeper-batter Ishan Kishan has set a new record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments