FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனைவருக்கும் பிடித்திருப்பதால் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாது: பயிற்சியாளர்

அனைவருக்கும் பிடித்திருப்பதால் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ
பகிர்:

அனைவருக்கும் பிடித்திருப்பதால் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.

கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியை சேர்த்தால் அது அவருக்கும் பலனளிக்காது, அணிக்கும் பலனளிக்காது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடக்கத்தில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என அதிகபட்சமான எதிர்பார்ப்புகள் பல தரப்பிலிருந்தும் இருந்தது. ஆனால், உண்மையில் அது அவருக்கும், அணிக்கும் நல்லதல்ல என உணர்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி தற்போது முன்பிருந்ததைவிட முதிர்ச்சியான வீரராக உள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நன்றாக விளையாடி வருவதால், அவர்களை எப்படி பிளேயிங் லெவனிலிருந்து நீக்க முடியும். அணியில் மிடில் ஆர்டரும் நன்றாக உள்ளது. வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவரது இடத்தில் நான் இருந்தாலும் அப்படித்தான் நினைப்பேன். ஆனால், அவர் இளம் வீரர். அவர் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வீரர். அணி நிர்வாகத்தில் உள்ள அனைவரும் அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர். அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். சமூக ஊடகங்கள் அவரை விரும்புகின்றன. இந்திய அணியும் அவரை விரும்புகிறது. ஆனால், அனைவருக்கும் பிடித்திருக்கு என்பதற்காக பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்ய முடியாது என்றார்.

இந்திய அணிக்காக கடந்த ஜூலையில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். அதன் பின், இந்திய அணி விளையாடிய 19 டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

summary

Indian team batting coach Sitanshu Kotak has said that Vaibhav Suryavanshi cannot be included in the playing eleven because of his popularity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments