வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான பந்துவீச்சு சவாலுக்கு காத்திருக்கிறேன்: நியூசி. வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான சவாலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அவர் மிகவும் நேர்த்தியான திறமை வாய்ந்த வீரர். அவரது திறமைகள் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் மிகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடவுள்ளார். அவருக்கு எதிரான பந்துவீச்சு சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வைபவ் சூர்யவன்ஷி நியூசிலாந்தில் முதல் முறையாக விளையாடவுள்ளார் என நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது என்றார்.
A New Zealand fast bowler has stated that the inclusion of Vaibhav Suryavanshi in the Indian squad for the series against New Zealand did not come as a surprise to him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.