டோரதி தமிழ் ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படம்: கார்த்திக் சுப்புராஜ்
டோரதி திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டோரதி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”மகான் திரைப்படத்தை முடித்ததும் டோரதியைத்தான் இயக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ரெட்ரோ படங்களால் இது தள்ளிச்சென்றது. இப்படியொரு கதை இருக்கிறது எனத் தயாரிப்பாளர் குனீத்திடம் சொன்ன போது, பட்ஜெட் பற்றியெல்லாம் எந்த கேள்வியும் இல்லாமல் செலவு செய்தார். இத்திரைப்படம் முக்கியமான விஷயத்தைப் பேசுகிறது. இதில் நடிப்பதற்காக நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்தை ஒப்பந்தம் செய்த போது, சரியாக செய்வார்களா என்கிற கேள்வி இருந்தது. ஆனால், முதல்நாள் படப்பிடிப்பிலேயே அசத்திவிட்டனர். இருவருமே உடல்மொழியில் ஏதேதோ செய்து காட்சிகளுக்கு பலத்தைக் கூட்டியிருக்கின்றனர். இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களாக வருவார்கள்.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். அவருடன் 20 நாள்கள் செலவிட்டது பெரிய பரிசாக இருந்தது. அவரிடம் எப்படி இசை வாங்கினீர்கள்? எனப் பலரும் கேட்டனர். ராஜா சார் ஒரு இயற்கை... அவரிடம் அவ்வளவு இருக்கிறது. நாம் என்ன கேட்பது? எல்லாம் அவர் கொடுப்பதுதான். அவருடன் பணியாற்றியது என் பாக்கியம்.
டொடரண்டோ திரைப்பட விழாவில் டோரதியைப் பார்த்தவர்களில் சிலர் இப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனக் கேட்டார். அவர்களிடம் நான், ‘தமிழ் சினிமா ரசிகர்களை நம்பித்தான் டோரதியை எடுத்துள்ளேன்’ எனக் கூறினேன். நான் இயக்கிய திரைப்படங்களிலேயே பலரும் இறைவிதான் சிறந்தது எனச் சொல்வார்கள். டோரதி திரைப்படம் இறைவியைவிட நெருக்கமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Director Karthik Subbaraj has spoken about the film Dorothy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.