டோரதி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை?
மலேசியாவில் டோரதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி மலேசியாவில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த இருவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பகையாளியாக மாறும் கதையில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
டொரண்டோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு டோரதி பாராட்டுகளைப் பெற்றதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களும் நாளை (செப். 25) வெளியாகும் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன்பாலின ஈர்ப்பு உள்பட LGBTQ- சார்ந்த விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் மலேசியாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால், அங்குள்ள ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Reports indicate that the release of Dorothy, directed by Karthik Subbaraj, has been banned in Malaysia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.