FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டோரதியைப் பாராட்டிய நடிகர் மம்மூட்டி!

டோரதி திரைப்படத்தைப் பாராட்டிய மம்மூட்டி...

நடிகர் மம்மூட்டியுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த்.
பகிர்:

நடிகர் மம்மூட்டி டோரதி திரைப்படத்தைப் பாராட்டியதாகக் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ், “டோரதி குறித்தான உங்கள் வாழ்த்துகளுக்கும் நேரத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி மம்மூட்டி சார். நீங்கள் எப்போதும் உத்வேகத்தை அளிக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Karthik Subbaraj has posted that actor Mammootty praised the film Dorothy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments