FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அற்புதம், அழகு, அதிசயம்... டோரதி படக்குழுவை நேரில் வாழ்த்திய ரஜினி!

டோரதி படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் குறித்து...

14 வினாடிகள் முன்பு
டோரதி படக்குழுவினர் உடன் நடிகர் ரஜினிகாந்த் - படங்கள்: எக்ஸ் / கார்த்திக் சுப்புராஜ்
பகிர்:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்தினைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னர் பிரபலங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தை தனுஷ், சூர்யா, மணி ரத்னம், உபேந்திரா என பலரும் பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில், நடிகர் ரஜினி கார்த்திக் சுப்புராஜ், சனத், ரிஷிகாந்த்தைப் பாராட்டியுள்ளார். இது பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:

தலைவா... ‘அற்புதம்... அழகானது... அதிசயக்க வைத்தது’ என தலைவர் ரஜினி பாராட்டினார். டோரதி படத்தைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். இதற்கு மேல் எதுவும் கேட்கமுடியாது.

எங்கள் உரையாடலில் அவர் சொன்ன, ‘இந்த கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஹாட்ஸ் ஆஃப்’ எனக் கூறியதை எப்போதும் மறக்க மாட்டேன். காற்றில் பறக்கிறேன். லவ் யூ தலைவே எனக் கூறியுள்ளார்.

டோரதி படம் இளையராஜாவின் 1540ஆவது படம். பாடல், பின்னணி இசை என இளையராஜா அசத்தியிருந்தார். இந்தப் படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

summary

Rajinikanth meets Karthik Subbaraj, Rishikanth, Sananth; praises Dorothy: 'Mindblowing…'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments