FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்: நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

15 அக்டோபர் 2026, 4:27 pm IST
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் (43) வெளிநாட்டு குடியுரிமை வைத்திருக்கும் அமெரிக்க குடிமகன் ஆவார். நடிகர் ஆமீர் கானின் உறவினரான இவர், அக்டோபர் 10 அன்று மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபி போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டார்.

இந்தியக் குடிமகன் அல்லாத நிலையில் வெளிநாட்டு குடியுரிமை கொண்டவராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இம்ரான் கானுக்கு, குடிவரவுச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என மும்பை காவல்துறை தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

’இந்தியக் குடிமகனாக இல்லாமல் மும்பையில் போராட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கானுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற அக். 28 ஆம் தேதிக்குள் அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என மும்பை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் மீது பாஜக தலைவர் கிரித் சோமையா அக். 12 அன்று அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கிரித் சோமையா தனது புகாரில், இம்ரான் கான் அமெரிக்கப் பிரஜை என்றும், எஸ்.ஐ.ஆர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் என்ற கருத்தைத் தூண்டிவிடுவதற்காக அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இம்ரான் கானுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி அவரது குடியுரிமைச் சான்றிதழ்களை சரிபார்க்குமாறும் அவர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் நோட்டீஸை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

summary

Protest against Gyanesh Kumar: Actor Imran Khan served notice to leave the country!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments