பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
பெல் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர், திட்ட பொறியாளர் என 100 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர், திட்ட பொறியாளர் என 100 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee Engineer - 40
வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000
பணி: Project Engineer- 60
வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து Manager (HR/ES&SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru - 560013 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ. 168, புராஜக்ட் இன்ஜினியர் பணிக்கு ரூ. 418 . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கபப்பட்டுள்ளகு.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 23.9.2022
மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=Webadvertisement010922_20220905085440825_X-6-9-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கத்தார் ஏர்வேஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
ரயில் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத் துறையில் சூப்பர் வேலை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.