வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய துணை ராணுவப் படை(சிஆர்பிஎப்) -இல் நிரப்பப்பட உள்ள காவலர் பணியிடங்கள் குறித்து...
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய துணை ராணுவப் படை(சிஆர்பிஎப்) -இல் நிரப்பப்பட உள்ள 9,195 காவலர் (தொழில்நுட்பம், வர்த்தகப் பணியாளர்கள் மற்றும் முன்னோடிப் பிரிவு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இரு பாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
பணி: Constable (Technical & Tradesmen)
Advertisement
காலியிடங்கள்: 9197
சம்பளம்: மாதும் ரூ.21,700 - 69,100
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Mason, Cook பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவ சான்றுடன் விண்ணப்பிக்கவும். Barber, Washermen, Water Carrier, Safai Karmchari பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி ஓட்டுநர் பணிக்கு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ.உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ. அகலமும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்: குறைந்தபட்சம் 157 செ.மீ.உயரம் இருக்க வேண்டும்.
குறிப்பு: எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ. உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ. இருக்க வேண்டும். 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி யானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப் படுவர்.
தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் அட்ட வணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உடற்திறன் தேர்வில் ஆண்கள் 5 கி.மீ. தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 1.6 கி.மீ.தூரத்தை 8.30 நிமிடங்களிலும் ஓடி கடக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.