பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 472 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
பொதுத்துறை நிறுவனமான வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 472 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NCL/SING/HR/Direct-Recruitment/2026-27/125
பணி: HEMM Operator Trainee
Advertisement
காலியிடங்கள்: 472
1. Dumper Operator(Trainee) - 308
2. Surface Miner Operator(Trainee) - 43
3. Dozer Operator(Trainee) - 52
4. Grader Operator(Trainee) - 34
5. Pay Loader Operator(Trainee) - 18
6. Grane Operator(Traineer) - 17
சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ. 1,502.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கனரக வாகன ஓட்டுநர் செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்ப்படுபவர்களுக்கு HEMM Operator பணிக்கான 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். அதற்கு பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வில் கொள்குறிவகை கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் Road Signs, Signals, Traffic Rules, Motor Vehicles Act, Elementary Knowledge of Machine, General Awareness, General Knowledge, Basic Mathematical Aptitude பிரிவுகளிலிருந்து கேட்கப்படும். எழுத்துத் தேர்வு தொடர்பான தகவல்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nclcil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2026 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.