பொதுத்துறை நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக...
இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனமான என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 06B/26
Advertisement
Advertisement
பணி: Engineer (Contracts & Materials)
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ. 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மின் துறை, எண்ணெய், எரிவாயு, இரும்பு தொழிற்சாலைகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மட்டும் என்டிபிசி-ல் நிரந்தரமாகபணியமர்த்தப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக பொது, ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.5.2026
மேலும் விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
NTPC Recruitment 2026 for 25 Engineer Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.