முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.79,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் ஹவில்தார் பணி!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் ஹவில்தார் பணி தொடர்பாக...

Updated On : 1 ஜூலை 2026, 1:41 pm IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் - BEL
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் ஹவில்தார் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026

Advertisement

Advertisement

பணி: Havildar(Security)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.20,500 முதல் 79,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.6.2026 தேதியின்படி 43-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்து, நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபாலில் விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

AGM (HR & Administration), Bharat Electronics 4 Limited, BEL - Army School Road, Nandambakkam, Chennai - 600 089.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.7.2026

வேலைக்கு விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Candidates willing to apply for the above post may submit their application in the prescribed format along with the copies of the relevant documents in support of eligibility....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments