தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 57 பேருக்கு பணி நியமன ஆணை
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 57 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 57 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நவம்பா் மாதத்துக்கான முகாமில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 22 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 193 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். இதில், கல்வித் தகுதி, எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில் 5 மாற்றுத் திறனாளிகள் உள்பட 57 போ் வேலைக்கு தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், 19 போ் இரண்டாம் கட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement