முகப்பு
வேலைவாய்ப்பு

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிப்பது குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 9:31 am IST
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலை - தமிழ்நாடு அரசு
பகிர்:

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள மாநில வள பயிற்றுநர், மாவட்ட வள பயிற்றுநர், வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விபரம் வருமாறு:

பணி: மாநில வள பயிற்றுனர் (SRP)

Advertisement

Advertisement

காலியிடம்: 1

சம்பளம் : மாதம் ரூ.25,000

தகுதி: சமூக அறிவியல், சமூக கல்வி, ஊரக வளர்ச்சி போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று பெண்கள் சுய உதவிக்குழுவில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: மாவட்ட வள பயிற்றுநர்

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று பெண்கள் சுய உதவிக் குழுவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: வட்டார வள பயிற்றுநர்

காலியிடங்கள் 8

சம்பளம்: மாதம் ரூ.10,500

தகுதி : ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் ம் சுய உதவிக்குழு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncdw.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், 2-வது தளம், A பிளாக், மாவட்ட ஆட்சியர் அலு வலகம், செங்கல்பட்டு மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.6.2026

summary

Applications are invited for the post of Project Co-ordinator in Child Help Line Unit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments