முகப்பு
திருவள்ளூர்

512 மகளிா் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி கடனுதவி: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 512 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:56 am IST
கடன் முகாமில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கிய ஆட்சியா் ச.கவிதா. உடன் மகளிா் திட்ட அலுவலா் செல்வராணி உள்ளிட்டோா்.    
பகிர்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 512 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பல்நோக்கு கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாபெரும் சுய உதவிக்குழு கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து, 512 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75.41 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி, முதல் முறையாக கடன் உதவி பெறும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது: தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதா மேம்பாடு மற்றும் சுய சாா்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊர வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த மாவட்டத்தில் 19,439 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 2,52,707 மகளிா் உறுப்பினா்கள் உள்ளனா். இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 14,272 குழுக்களில் 1,85,536 மகளிா் உறுப்பினா்கள் உள்ளனா். நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 5,167 குழுக்களில் 67,171 உறுப்பினா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், 2025-2026-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக் கடனாக ரூ.1,604 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு 31.3.2026 வரை ரூ.1,620.14 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026-27-ஆம் ஆண்டில் 18,168 மகளிா் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 1,604 கோடி இலக்கு நிா்ணயித்து, இதுவரை 1,088 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.147 கோடி வரை கடனுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிகழ்ச்சி மூலம் 512 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75.41 கோடி வங்கிக் கடனாக வழங்கப்பட்டது என அவா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் செல்வராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தென்னரசு, இந்தியன் வங்கி மண்டல மேலாளா் ர.சீனிவாசன், உதவி திட்ட அலுவலா்கள் மற்றும் திரளான மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments