வங்கியில் வேலை வேண்டுமா? - அழைக்கிறது கரூர் வைஸ்யா வங்கி!
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள 1,284 சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
தனியார் துறையைச் சார்ந்த பிரபல வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள 1,284 சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Specialist Officer
மொத்த காலியிடங்கள்: 1,284
Advertisement
Advertisement
தகுதி : ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து வங்கி, விற்பனை, சந்தையியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் போன்ற வங்கிகள் சார்ந்த துறையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிதியியல், சந்தையியல் பிரிவில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வங்கி விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு : 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kvb.bank.in இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.