கரூர் பலி! பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை
கரூர் தோ்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை குறித்து...
கரூர்: கரூா் துயர சம்பவம் தொடா்பாக மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை பசுபதிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ்குமார் மற்றும் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-இல் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் தோ்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்ட நெரிசலின்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பல தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
இதனிடையே, 2026 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தங்களது விசாரணையை நிறுத்தி இருந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஏற்கெனவே சிபிஐ தரப்பில் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த கரூா் வெங்கமேடு காவல் ஆய்வாளரும், வாங்கல் (பொ) காவல் ஆய்வாளருமான சையத் அலி, கரூா் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் 8 போலீஸாா் வியாழக்கிழமை காலை கரூரில் பொதுப்பணித் துறை அலுவலகத்திற்குச் சொந்தமான பயணியா் மாளிகையில் தங்கியிருக்கும் இரு சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகினா். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமாா் 3 மணி நேரம் நீடித்தது.
இந்த நிலையில், ஏற்கெனவே சிபிஐ தரப்பில் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ்குமார் மற்றும் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆர்த்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை 10. 50 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினா். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சுமாா் 2 மாத இடைவெளிக்குப் பின் கரூரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் துயர சம்பவம் விசாரணையை தொடங்கி நடத்தி வருவது சமூக நல ஆா்வலா்களிடையே பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karur casualty... CBI inquiry with the Pasupathipalayam Police Inspector and Sub-Inspector!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.