ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு: கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜர்!
ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானது பற்றி...
கரூர்: ரூ. 100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர முன்னாள் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகினர்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கரூர் சார்பதிவாளர் கடந்த 2024 -ல் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிருத்விராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கரூர் ஜூடீசியல் மாஜிஸ்ட்ரேட் எண் 1-ல் திங்கள் கிழமை காலை 11 மணியளவில் முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் கரூர் நகர காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோர் நீதிபதி பரத்குமார் முன் ஆஜராகினர்.
Advertisement
Advertisement
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கினை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Rs. 100 crore land fraud case: M.R. Vijayabaskar appears before Karur court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.