முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!
கரூர் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்...
கரூர் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசாக அளித்தார்.
கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் கரூர் வந்துள்ளார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து காரில் கரூருக்கு வந்தார்.
கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், அரங்குக்குள் வந்த முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாளை பரிசாக அளித்தார்.
நிகழ்வில் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர்,
"என்னுடைய 3 வயது பேரன் சொல்கிறான் தாத்தா எங்கள் கட்சிக்கு வந்துவிட்டீர்கள் என்று.. இனிமேல் தளபதி ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் ஒன்று சேர்ந்த தலைவராக விஜய் உள்ளார். தமிழகத்தில் விஜய் வரலாறு படைத்துள்ளார்.
நாங்கள் கட்சியில் இணைந்த அடுத்த நாள் முதல்வருடன் 2 மணிநேரம் சந்திப்பு நடந்தது. உடம்பெல்லாம் சிலிர்க்கும்படி அந்த நிகழ்வு இருந்தது. என் மேல் கை போடும்படி ஒரு போட்டோ வேண்டும் என்று கேட்டேன். உடனே அதை எடுத்து கொடுத்தார். கனவா நனவா என்றே தெரியவில்லை" என்று கூறினார்.
M.R. Vijayabhaskar presented a silver sword to Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.