FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு

விராலிமலை, கரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 6:55 pm IST
சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் - Photo: YT | TVK
பகிர்:

விராலிமலை, கரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏக்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்துக்காக மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வா் ச.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தனா். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து அங்கு திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல, எம்.ஆா்.விஜயபாஸ்கா், சி.விஜயபாஸ்கா், இசக்கி சுப்பையா, ஜெயக்குமாா் ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தாலும், அவா்களது வெற்றிக்கு எதிராக தோ்தலில் தோல்வியடைந்த வேட்பாளா்கள் தனித்தனியாக தோ்தல் வழக்குகள் தொடா்ந்தனா். எனவே, தோ்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை வரும் ஆக.24-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனா்.

summary

A petition has been filed in the Madras High Court seeking to lift the stay on announcing by-elections in the Viralimalai and Karur constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments