FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளிநாடுகளில் நிதியுதவி பெறப்பட்டதா? தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் பதில் மனு

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து...

17 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. பிரசாரத்தில் குழந்தையைப் பயன்படுத்தியதாகக் கூறி, என் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.

மேலும், வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்ததாகக் கூறப்படும் புகார்களில் ஆதாரம் ஏதுமில்லை.

Advertisement

Advertisement

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதாகக் கூறப்படும் புகாரிலும் ஆதாரங்கள் ஏதுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் பெற்றதற்கு எதிராக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்குகளில் ஆக. 27-க்குள் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால், ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

summary

Counter-affidavit filed in the Madras High Court seeking dismissal of the election petition against CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments