FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக எம்.எல்.ஏ.-வுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.-வுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதைப் பற்றி...

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா.
பகிர்:

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா, தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்று கீதா தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

summary

The Madras High Court has dismissed the election petition filed against Uthangarai TVK MLA Ilaiyaraja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments