முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் இளநிலை பொறியாளர் வேலை - என்எம்டிசி
பகிர்:

மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம், நாட்டில் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் அதிநவீன இயந்திரமயமாக்கப்பட்ட இரும்புத் தாதுச் சுரங்கங்களை சொந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் பதிவு அலுவலகம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது. உலகில் குறைந்த செலவில் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நிறுவனம், மத்தியப் பிரதேசம் மாநிலம் பன்னாவில் நாட்டின் இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கத்தையும் இயக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது, இளநிலை பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 6-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

Advertisement

Advertisement

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 04/2026

பணி: Junior Engineer (Mining)

காலியிடங்கள்: 59

சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.5.2026

விண்ணப்பிப்போர் கூடுதல் விபரங்களுக்கு deskcontroller@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

summary

NMDC is India’s largest producer of iron ore. Since inception, the corporation under the administrative control of the Ministry of Steel...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments