பொதுத்துறை நிறுவனனத்தில் நிதி உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஐஆர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனனத்தில் நிதி உதவியாளர் வேலை குறித்து...
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனம் ஐஆர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட். இது ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் முழுமையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் 2024-25 நிதியாண்டில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவிலும், மலேசியா, பங்களாதேஷ், அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பெரிய மதிப்புள்ள ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது, நிதி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
இதுகுறித்த விவரங்கள் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : C-08/2026
பணி: Finance Assistant
காலியிடங்கள்: 5
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ. 45,000
தகுதி : 55 சதவீத மதிப்பெண்களுடன் எம்.காம் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
JGM/HRM, IRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi-110017.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.5.2026
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி நாள்: 14.5.2026