விண்ணப்பித்துவிட்டீர்களா..?பொதுத்துறை வங்கியில் வேலை!
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து மே.12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். BOB/HRM/REC/ADVT/2026/09
பணி: Sports persons(Clerical Cadre)
Advertisement
காலியிடங்கள்: 30
விளையாட்டுப் பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. Cricket - 9
2. Kabaddi - 11
3. Table Tennis - 2
4. Football - 8
சம்பளம்: மாதம் ரூ. 24,050 - 57,400
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில பல்கலைக்கழக அளவில் விளையாடி சாதனை படைத்திருப்பது விரும்பத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை ரஞ்சி, துலீப், ரானி கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.4.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பின்னர் கிளார்க் பணி வழங்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாத உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு மற்றும் நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வரவும். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு ரூ.175. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.800. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.bank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.5.2026
Applications are invited from eligible candidates for the position of Sports persons(Clerical Cadre)...