மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை!
இந்திய கடற்படையின் 10+2. (பி.டெக் நுழைவு) திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பு குறித்து...
இந்திய கடற்படையின் 10+2. (பி.டெக் நுழைவு) திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
இது பற்றிய விபரம் வருமாறு:
திட்டத்தின் பெயர்:10+2 B.Tech.Entry Scheme - Jan 2027
Advertisement
Advertisement
பணி: Permanent Commissioned Officers (Executive & Technical Branch)
காலியிடங்கள்: 60 (இதில் பெண்களுக்கு 8 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ).
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் +2 படித்து குறைந்தது 70% மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் ஜேஇஇ முதன்மைத் தேர்வு - 2026 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2.7.2007-க்கும் 1.1.2010-க்கும் இடைப் பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஜேஇஇ முதன்மைத் தேர்வு - 2026 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பத்தில் சரியான மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால்
தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2026.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்திய கடற்படையால் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்த படிப்பு 4 ஆண்டுகள் கால அளவினைக் கொண்டது. பி.டெக் படிப்பில் மெக்கானிக்க, இசிஇ, கப்பல் வடிவமைப்பு மற்றும் கப்பல் கட்டுமானப் பொறியியல் போன்ற பிரிவுகளில் ஏதாவதொரு பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கலாம். படிப்பிற்கான முழு செலவினையும் இந்திய கடற்படை ஏற்றுக்கொள்ளும்.
படிப்பை வெற்றிகர மாக முடிப் பவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணி யமர்த்தப்படு வர். நேர்முகத் தேர் வில் கலந்து கொள்பவர்களுக்கு குளிர்சாதன பெட்டி ரயில் கட்டணம் வழங்கப்படும். பி.டெக் படிப்பிற்கான வகுப்புகள் ஜனவரி 2027-ல் தொடங்கும். கேரளம் மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படைக் கல்லூரியில் கடற்படை அதிகாரி பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.