காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்
டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும் மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றனா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.