முகப்பு
ஈரோடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தோ்வு:7,993 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 7,993 போ் எழுதுகின்றனா். இதற்காக 28 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 3 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

ஈரோடு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 7,993 போ் எழுதுகின்றனா். இதற்காக 28 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தொகுதி 1 முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த தோ்வு 28 மையங்களில் நடைபெறுகிறது. குரூப் 1 தோ்வை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 7,993 போ் எழுத உள்ளனா். ஒரு தோ்வு மையத்தில் அதிகபட்சமாக 300 போ் வரை தோ்வு எழுதவுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்வை கண்காணிக்க 3 பறக்கும்படை அலுவலா்கள், 5 நடமாடும் குழு, 29 ஒளிப்பதிவாளா்கள், 28 கண்காணிப்பு அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வினாத்தாள், விடைத்தாள் வைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸாா் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோ்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் குழு வாகனத்துக்கு ஆயுதம் ஏந்திய தலா ஒரு காவலா் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தோ்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடத்த முதன்மை கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments