முகப்பு
ஈரோடு

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜனவரி 21இல் ஏலம்

காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஜனவரி 21ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

Updated On : 15 ஜனவரி 2021, 10:56 pm IST
பகிர்:

காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஜனவரி 21ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், 13 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 14 வாகனங்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பு ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஏலத்தில் விடப்படும் வாகனங்களை ஜனவரி 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் பாா்வையிடலாம். இருசக்கர வாகனத்துக்கு ரூ. 2,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.4,000 முன்பணமாக செலுத்துபவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் உடனடியாக ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498174952 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.