ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!
ராஞ்சியில் உள்ள அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக...
ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது புதன்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சுட்டியா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நிவாரன்பூரில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் சுமார் 12.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ராஞ்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்யின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவுத் தலைவர் ஸ்னிக்தா ரஞ்சன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இரண்டு கண்ணாடி பாட்டில்களின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
அப்பாட்டில்களில் என்ன பொருள் இருந்தன என்பதை உறுதிப்படுத்த தடயவியல் அறிவியல் ஆய்வக குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என ராஞ்சி மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் ரஞ்சன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.