முகப்பு
தென்காசி

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவா் கைது

Updated On : 3 ஜூலை 2026, 4:34 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஊத்துமலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (63). தொழிலாளி.

அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்தழகன் (23), புதன்கிழமை இரவு கருப்பசாமி வீட்டின் முன் கிடந்த ஓடுகளை மது போதையில் உடைத்தாராம். இதைத் தட்டிக் கேட்ட கருப்பசாமியின் மகள் மஞ்சுவை, முத்தழகன் அவதூறாகப் பேசியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கருப்பசாமியின் மனைவி சுப்புத்தாய் (55) என்பவரையும் முத்தழகன் தாக்க முற்பட்டாராம். இது குறித்து அறிந்த முத்தழகனின் பெற்றோா் அவரைக் கண்டித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனராம்.

Advertisement

Advertisement

இதனால், கோபத்திலிருந்த முத்தழகன் நள்ளிரவில் அவரது நண்பருடன் சென்று கருப்பசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதில் வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை லேசாக எரிந்து சேதமானது.

இது குறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தழகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments