முகப்பு
ஈரோடு

வஉசி பூங்காவுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு

காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு வஉசி பூங்காவுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜனவரி 2021, 10:58 pm IST
ஈரோடு வஉசி பூங்கா நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.
பகிர்:

காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு வஉசி பூங்காவுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படும். ஈரோடு, வஉசி பூங்காவில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பெண்கள் மட்டும் காணும் பொங்கல் தினத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவா். ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

இந்த ஆண்டு காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜனவரி16) கொண்டாடப்படுகிறது. பூங்கா பராமரிப்புப் பணி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பூங்காவுக்குள் நுழைய பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.