கர்ப்பிணிகளே...உங்கள் பல் நலம் காக்க...
ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஹார்மோன்கள் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால், பற்களின் ஈறுகள் வீக்கமடையலாம். இரத்தம் கசியலாம். உணவுத் துகள்க
ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஹார்மோன்கள் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால், பற்களின் ஈறுகள் வீக்கமடையலாம். இரத்தம் கசியலாம்.
உணவுத் துகள்கள் பல்லிடுக்கிடையே சிக்கி ஈறுகளில் வலி, எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் கரு உருவான ஆரம்ப காலத்திலேயே பல் மருத்துவரை கர்ப்பிணிகள் நாடி, பல் சொத்தை இருந்தால் அடைப்பது, பல் மீது உறை அமைப்பது, பல்லைப் பிடுங்குதல், வேர்நிலை சிகிச்சை செயதல், பற்கள் சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையைப் பெறுவது அவசியம்.
மாதங்கள் செல்ல செல்ல பல் மருத்துவரின் சாய்வு இருக்கையில் மல்லாந்து படுக்க முடியாது. மருந்து-மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. எக்ஸ்-ரே-ஐத் தவிர்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
இதனால்தான் கர்ப்பிணிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதிக கவனம் எடுத்துக் கொள்வதை மருத்துவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் சில மாத்திரைகள் கருக் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும். எக்ஸ்-ரே எடுப்பதைத் தவிர்ப்பது அவசியம்.
சிகிச்சையை ஒத்திப்போடலாமா? பல்லில் பிரச்னை ஏற்பட்டால், பல் மருத்துவரிடம் செல்வது அவசியம். தாம் கர்ப்பம் அடைந்திருப்பதை முதலில் பல் மருத்துவரிடம் கூற வேண்டும். பிரச்னையை ஆய்வு செய்து, பல் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருப்பது பாதுகாப்
பானது.
எனினும் தவிர்க்க முடியாத நிலையில், அதாவது பல் பிடுங்குதல்-பல் வேர் சிகிச்சை என கர்ப்பிணிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் சிகிச்சையை உரிய கவனத்துடன் டாக்டர்கள் செய்வது அவசியம். பற்களை வெண்மைப்படுத்துதல் உள்ளிட்ட அழகு சிகிச்சைகளை குழந்தை பிறக்கும் வரை கர்ப்பிணிகள் ஒத்திப் போடுவது நல்லது.
பல் நலம் காக்க...: கர்ப்ப காலத்தில் பல் நலம் காக்க தினமும் இரண்டு முறை பல் துலக்குவதை கர்ப்பிணிகள் பழக்கமாகக் கொள்ள வேண்டும். சிறிய பிரச்னைக்கு பல் சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. பல் மருத்துவமனையின் நாற்காலியில் கர்ப்பிணிகள் அமரும்போது, கால்களை ஒன்றன் மீது ஒன்றாகப் போட்டு உட்காருவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, இரண்டு கால்களையும் நேராக தனித் தனியே நீட்டி வைத்துக் கொள்ளும் நிலையில் ரத்த ஓட்டம் தடைபடாது.
மேலும் விவரங்களுக்கு: ஏ.வி. அருண்,
இயக்குநர்,
ஸ்மைல் சென்ட்டர்,
ஏ-29/1, 2வது மெயின் ரோடு,
அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 102.
செல் எண்: 9884042526.