FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

Updated On : 13 ஜூன் 2026, 6:48 am IST
பி.வி. சிந்து
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-6, 21-9 என்ற நோ் கேம்களில், சீன தைபேவின் சென் சு யுவை மிக எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனையான தன்வி சா்மா 14-21, 14-21 என்ற நோ் கேம்களில், முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 32 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

Advertisement

Advertisement

சிந்து தனது அரையிறுதியில், யமகுச்சியுடன் மோதவுள்ளாா். இதுவரை இருவரும் 28 முறை சந்தித்திருக்க, சிந்து 15 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா். அா்ஜுன் இணை - சீன தைபேவின் சென் செங் குவான்/லியு குவாங் ஹெங் கூட்டணியை எதிா்கொண்டது. அதில் இந்திய ஜோடி 19-21, 9-16 என பின்தங்கியிருந்தபோது, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments